Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினை சந்தித்த அண்ணாமலை.! கை குலுக்கி வாழ்த்து.! 45 டிகிரியில் மொத்த சரணாகதி-கிண்டலடிக்கும் காயத்ரி ரகுராம்

தமிழக அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை கைகுலுக்கி பணிவாக வாழ்த்து பெற்றார். இந்தக் காணொளியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காயத்ரி ரகுராம், '45 டிகிரி சரியாக உள்ளது. மொத்த சரணாகதி' என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

Gayatri Raghuram criticizes Annamalai Chief Minister Stalin meeting and greeting
Author
First Published Jan 27, 2023, 9:30 AM IST

திமுக-பாஜக மோதல்

திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையேயான மோதல் போக்கு உச்ச கட்டத்தில் உள்ளது. தமிழக அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்களை அண்ணாமலை தெரிவித்து வருகிறார். முதலீட்டார்கள் மாநாட்டிற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளிநாடு சென்றதில் முறைகேடு, மின் வாரியத்தில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு, ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு நிலங்களை ஒதுக்கி முறைகேடு, கர்ப்பினி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதில் முறைகேடு என ஒன்றன் பின் ஒன்றாக புகார் தெரிவித்து வருகிறது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக நிர்வாகிகளும் அமைச்சர்களும் பாஜகவினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சிறையில் இருந்து விடுதலையான ராஜீவ் கொலையாளிகள்.!60 நாட்களாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட கொடுமை-சீமான் ஆவேசம்

Gayatri Raghuram criticizes Annamalai Chief Minister Stalin meeting and greeting

அண்ணாமலையை விமர்சிக்கும் திமுக

குறிப்பாக அண்ணாமலையில் ரபேல் வாட்ச் விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதனையடுத்து விமானத்தின் அவசரகால கதவு திறக்கப்பட்டதும் வைரலானது. இது போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யா சிவா-டெய்சி சரண் இடையேயான தொலைபேசி உரையாடல் தமிழக மக்களை மட்டுமல்லாமல் பாஜக நிர்வாகியையும் அதிர்ச்சி அடையவைத்தது. இதனையடுத்து பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென புகார் கூறி காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து அண்ணாமலை மீது தொடர்ந்து பல்வேறு புகார்களை கூறி வருகிறார்.

Gayatri Raghuram criticizes Annamalai Chief Minister Stalin meeting and greeting

தேர்தலில் போட்டியிட தயாரா.?

தைரியம் இருந்தால் ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா என சவால் விடுத்துள்ளார். மேலும் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் நடை பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில் அதற்க்கு போட்டியாக அதே தினத்தில் தானும் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்தநிலையில்,

 

அண்ணாமலை மொத்த சரணாகதி

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஐக மாநில தலைவர் அண்ணாமலை பணிவாக முதலமைச்சருக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ பதிவை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதிவிட்டு  45 டிகிரி சரியாக உள்ளது. மொத்த சரணாகதி என கிண்டலடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காணுங்கள்! ஆளுநர் ரவி அதிரடி உத்தரவு

Follow Us:
Download App:
  • android
  • ios