சமாதானமாக போன டெய்சி சரண்-திருச்சி சூர்யா... ஒரே வார்த்தையில் கருத்து சொன்ன காயத்திரி ரகுராம்!!

பாஜக ஓபிசி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா தனக்கு தம்பி என்று சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரண் தெரிவித்துள்ள நிலையில் காய்த்ரி ரகுராம் ஒற்றை வார்த்தையில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

gayatri raghuram commented in one word about daisy and trichy suriya went peacefully

பாஜக ஓபிசி மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா தனக்கு தம்பி என்று சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரண் தெரிவித்துள்ள நிலையில் காய்த்ரி ரகுராம் ஒற்றை வார்த்தையில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜகவின் ஓபிசி பிரிவு தலைவராக இருந்த திருச்சி சூர்யா சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி சரணும் தொலைப்பேசியில் பேசும் ஆடியோ வெளியானது. அதில், திருச்சி சூர்யா டெய்சியை ஆபாசமாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: திருச்சி சூர்யா சிவா பாஜக-வில் இருந்து நீக்கம்…. அண்ணாமலை அதிரடி நடவடிக்கை!!

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் வலியுறுத்திய நிலையில் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு விசாரணை அறிக்கை கட்சி தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: அக்கா-தம்பியா? டெய்சி சரண்-திருச்சி சூர்யா ஆடியோ விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

மேலும் திருச்சி சூர்யா தனது தம்பி போல என டெய்சி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், தனது டிவிட்டர் பக்கத்தில் துச்சாதனன் வென்றார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே திருச்சி சூர்யாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆறு மாதத்திற்கு நீக்குவதாக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios