gayathri raghuram post about gomuthra going viral in twitter

போருக்கு போய் உடல் புண்ணான வீரர்களை விட... தற்போது சோஷியல் மீடியாவில் வாயக் கொடுத்து மாட்டிக்கொண்டவர்களின் எண்ணிக்கை வகை தொகையில்லாமல் நீண்டு கொண்டே போகுது.

ஏதோ ஒரு சர்ச்சையை டூவிட்டி விட்டு பின்னே அவங்க படுற பாடு இருக்கே அந்த லார்டுக்கு தெரியும்... 

டைம் லைன்ல வந்து கமெண்ட்ஸ் என்ற பேர்ல வந்து விழுகிற கெட்ட கெட்ட வார்த்தைகளை டெலிட் பன்றதுக்கே அவங்களுக்கு டைம் பத்தாது....

மாண்புமிகுக்கள் தொடங்கி கட்சி ஆபிஸ்ல வாட்டர் கேன் போடுற ஆபிஸ் பாய் முதற்கொண்டு அனைவருமே சமூக வலைத்தலங்களிலேயே குந்த வைத்து உட்கார்ந்து இருக்காங்க.

தெருவுல குலாத் தண்ணி வராதை பேஸ்புக் லைவ்வ பயன்படுத்தி டிவி ரிப்போர்ட்டர் கணக்கான பேட்டி எடுக்கும் சமகால நெட்டிசன்கள், மாட்டிறைச்சி விவகாரத்தையும் பா.ஜ.க.வும் லேசுல விட்டுவாங்கலா என்ன....

மாட்டிறைச்சி விவகாரத்தில் பிரதமர் மோடி முதல் தமிழகத்தின் ஹெச்.ராஜா. தமிழிசை சவுந்திரராஜன் என ஒவ்வொரு வரையும் மீம்ஸுகளாலும், வீடியோக்களாலும் தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டிருக்காங்க.. 

பேஸ்புக்ல தா இப்படினா அரசர் பெயர் வைத்திருக்கும் பா.ஜ.க. தலைவரை டுவிட்டரில் டரியல் ஆக்கியிருக்காங்கலாம் நெட்டிசன்கள். சரி விசயத்திற்கு வருவோம், மாட்டின் சிறுநீர் குடித்தால் இத்தனை நோய் குணமாகும் என காயத்ரி ரகுராம் ஒரு சீரியஸ் டுவிட்டை டுவிட்டரில போட, அவரை மானாவாரியாக வெளுத்து வாங்கியிருக்காங்க நெட்டிசன்கள்...

ரேட்டிங்கில் முதல் நான்கு இடங்களைப் பெற்றிருக்கும் கமெண்ட்ஸ்கள் 

1. நீங்க கோமியத்தை குடிக்கிறீங்களா?

(வீடியோ பகிரவும்)

2. கோமியத்திற்கு இவ்வளவு சக்தி இருப்பின் பாஜக முக்கிய தலைவர்கள் தினமும் குடிக்கலாமே?

3.எல்லா மருத்துவமனைகளையும் மூடிட்டு மூத்திரத்தை மட்டும் குடிக்க வடஇந்தியனிடம் சொல்லுங்க

4.மாட்டு மூத்திறத்துக்கே இவ்ளோ பவர்னா...மாட்டு சாணிய சாப்பிட்டா?! டிரை பன்னி வாருங்கோ....

5.ஆம். அதற்கானபலனை அவர்கள் அனுபவிப்பார்கள். அவர்தான் மதம் கொண்டு மத அரசியல் என்றால் நீங்களும் எதிர்ப்பதற்காக இந்து சமயம் நிந்திப்பது அநியாயம்

6.மாட்டுமூத்திரத்துக்கே இவ்ளோ பவர்னா மாட்டுக்கறிக்கு எவ்ளோ இருக்கும் மேடம் கொஞ்சம் சாப்ட்டு தான் பாருங்களேன்