பள்ளிகளில் இனி நதள்தோறும் காயத்ரி மந்திரம் உச்சரிக்க வேண்டும் என்றும், இதற்கா உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்றும் ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் 19 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. மத்தியில் பாஜக ஆட்சி வந்தது முதலே, இநிதுத்துவா தொடர்பான பல  விஷயங்கள் பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் பள்ளிக்கூடங்களுக்கு காவி நிற வண்ணம் பூசப்பட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதே போன்று, பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவா தொடர்பான பல நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டடுள்ளன.

இந்நிலையில்  சில மாதங்களுக்கு முன் ஹரியானா மாநிலத்தில் கீதை ஸ்லோகங்கள் பள்ளி பாடத்திட்டங்களில்  இணைக்கப்பட்டது. இதற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தற்போது பள்ளி பிரார்த்தனைகளில் காயத்ரி மந்திரம் பயன்படுத்துவது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹரியானா மாநில கல்வி அமைச்சர் ஆர்.பி.ஷர்மா கூறுகையில், 'காயத்ரி மந்திரம் நமது ஞானிகள் மற்றும் ரிஷிகள் உலகிற்கு அளித்த நன்கொடை. ஹரியானா பள்ளிகளில் காலை பிரார்த்தனைகளில் காயத்ரி மந்திரத்தை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வரும் நாளை  வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பிற மதத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.