இந்தியாவில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் கங்கை நதியில் மாசு கலப்பது  முற்றிலும் தடைபட்டுள்ளது, எனவே கங்கை  நீர் பருகுவதற்கு ஏற்றதாக  மாறிவருவதாகவும்  ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் . கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது இந்தியாவில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் ,  300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . முன்னதாக  கடந்த மார்ச் 20 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் .  இதனால் இந்தியா முழுவதும் தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் ,  உணவகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. 

 

மக்கள் நடமாட்டம்  முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது , இந்நிலையில்  புனித நகரங்களில் ஒன்றான  உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில்  கங்கை நதி பல ஆண்டுகளாக மாசடைந்து பொலிவிழந்து காணப்பட்டுவந்தது,  குறிப்பாக மத வழிபாடுகள் மற்றும் சடங்குகளுக்கு வட இந்தியர்கள்  கங்கை நதியை பிரதானமாகப் பயன்படுத்திவந்தனர். இதனால் மோசமான கழிவுகளால் தண்ணீருக்கான தன்மையை இழந்து  சாக்கடைபோல காட்சி அளித்து வந்தது கங்கை.  இதுமட்டுமின்றி  வாரணாசி,  மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார்  ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக கங்கையில்  கலந்து நிதியை பாழ்படுத்தி வந்தது .  இதனால் பொதுமக்கள் அதன் நீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.  இதே நிலை தொடர்ந்தால் கங்கை நதி  கழிவு நீர் ஒடையாகமாற வாய்ப்புள்ளது என்றும் அதில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்றும்  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்தனர்.  கங்கையை புனரமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டுவந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . 

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி வந்த கழிவு நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.    அதேபோன்று வாரணாசியில் இறந்தவர்களின் உடலை கங்கையில் வீசுவதும் தடைபட்டுள்ளது .  வைரஸ் எச்சரிக்கை காரணமாக புனித நீராடுவதற்காக கங்கைக்கு வருபவர்களின் எணிக்கை முற்றிலுமாக தடை பட்டுள்ளது.  இதனால் எந்தக் விதமாக கழிவும் கங்கையில் கலக்கப்படாமல் உள்ளதால்,   தற்போது கங்கை நீர் மக்கள் பருகுவதற்கு உகந்ததாக  மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் கங்கையில்  கலந்துள்ள 50%  மாசு குறைந்துள்ளது ,  அதே நேரத்தில் இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை பெய்ததால்  கங்கையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது கங்கை மட்டுமல்லாது யமுனை நதியில்  தரமும் மற்றும் அதன்  அளவிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் அதேபோல போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால் காற்றுமாசு வெகுவாக குறைந்துள்ளது, வாரணாசியில் இருந்து பலம்பெயர்ந்த  பல பறவை உனங்கள் மீண்டும் திரும்பி வருவதாகவும் நீர் தூய்மையானதால் பல அறியவகை மீன்கள் கங்கையில் தென்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.