Asianet News TamilAsianet News Tamil

"என் வெற்றியை தடுத்துவிட்டார்கள்" - கதறும் கங்கை அமரன்

gangai amaran says that EC prevent him from victory in Rk nagar
gangai amaran-says-that-ec-prevent-him-from-victory-in
Author
First Published Apr 11, 2017, 11:29 AM IST


ஆர்கே நகர் இடைத் தேர்தல் நாளை நடைபெற இருந்தது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது, உறுதி செய்யப்பட்டதால், தேர்தல் ஆணையம், இடைத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனால், தேர்தலல் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெக்ஸ்ஸாகி உள்ளனர். இதுபற்றி வேட்பாளர்களிடம் கேட்டபோது...

மதுசூதனன் :- தேர்தலில் பணத்தை வாரி இறைத்தது, சசிகலா அணியை சேர்ந்த டிடிவி.தினகரன் தான். அவரை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். அதையே எதிர் பார்த்தோம். ஆனால், தேர்தலையே நிறுத்திவிட்டனர்.

gangai amaran-says-that-ec-prevent-him-from-victory-in

மருதுகணேஷ் :- தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்தையே நானும் சொல்கிறேன்.

கங்கை அமரன் :- ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றிருந்தால், அதிக வாக்குகள் பெற்று நான் அமோக வெற்றி பெற்றிருப்பேன். ஆனாலும், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். இந்த தேர்தல் நிறுத்தப்பட்டதால், நாட்டு மக்களுக்கு பண பட்டுவாடா குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

gangai amaran-says-that-ec-prevent-him-from-victory-in

பண பட்டுவாடாவில் ஈடுபட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும். அப்போது நான் உறுதியாக போட்டியிடுவேன்.

ஜெ.தீபா :- ஏற்கனவே டிடிவி.தினகரன் மீது மோசடி வழக்குகள் உள்ளன. அவரை, தேர்தலில் போட்டியிட அனுமதித்திருக்க கூடாது. நான் தேர்தலில் போட்டியிட கூடாது என பல்வேறு சதிகளை அவர்கள் செய்தனர்.

gangai amaran-says-that-ec-prevent-him-from-victory-in

தற்போது பண பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்பது தொகுதி மக்களின் விருப்பம். எனவே மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் போது நான் போட்டியிடுவேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios