வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தர ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதே போல் அதிமுக – பாஜக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில்  தமிழ் மாநில காங்கிரசுடன் நடத்தி வந்த பேச்சு வார்த்தையில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும், ஒரு மாநிலங்களவைத் உறுப்பினர் பதவியும் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு முடிந்ததும், தமாகாவுடன் அதிகாரப்பூர்வமான பேச்சை தொடங்க அதிமுக திட்டமிட்டுள்ளது.