ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். ஜெயலலிதா, சென்னை, போயஸ் கார்டனில் வசித்து வந்தார். 

இந்த வீடு, அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது கட்டப்பட்டதாகும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் வசித்து வந்த இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அதிகாரிகளும் வேதா நிலையத்தில் பல முறை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், 2018 - 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதற்காக மொத்தம் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.