தலைமைச் செயலகத்தில் வரும் 29-ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து, மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.


 
இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், வரும் 29-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பொது முடக்க தளர்வுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

படிப்படியாக பள்ளிகள் , கல்லூரி வணிக வளாகங்கள் திறப்பு, போக்குவரத்து என தளர்வுகள் நீக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீண்டும் பொதுமுடக்கத்திற்கு உத்தரவிடப்படலாம் என்கிற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. ஆனால், சிலவற்றுக்கு முடக்கங்கள் இருக்கலாமே தவிர, மீண்டும் பொது முடக்கத்துக்கு வாய்ப்பிருக்காது என தலைமை செயலக வட்டாராத்தினர் கூறுகின்றனர்.