Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 1ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு..? ஆலோசனைக்கு பின் மு.க.ஸ்டாலின் முடிவு..!

 ஆக்சிஜனும் நிறைவாக உள்ளது. தேவைப்பட்டால் மேலும் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்’’ எனத் தெரிவித்தார்.
 

Full curfew again in Tamil Nadu from 1st ..? MK Stalin's decision after consultation ..!
Author
Tamil Nadu, First Published May 27, 2021, 2:02 PM IST

ஊரடங்கு நீடிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. நேற்று புதிய பாதிப்பாக தமிழகத்தில் 33,764 பேருக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 475 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 21815 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,  தளர்வுகள் அற்ற ஊரடங்கை நீடிக்கலாமா என மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதல்வர் உடனான ஆலோசனையில் மருத்துவ குழுவினர், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Full curfew again in Tamil Nadu from 1st ..? MK Stalin's decision after consultation ..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனையில் பேசப்பட்டவை என்ன? மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா? என அதிகாரிகளிடம் கருத்துக்கேட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தடுப்பூசி வீணாவது குறைந்துள்ளது. ஆக்சிஜனும் நிறைவாக உள்ளது. தேவைப்பட்டால் மேலும் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்’’ எனத் தெரிவித்தார்.Full curfew again in Tamil Nadu from 1st ..? MK Stalin's decision after consultation ..!

தலைமை செயலக வட்டாரத்தில் இது குறித்து விசாரித்த்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளதாக கூறுகின்றனர். ஏற்கெனவே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முதற்கட்ட ஊரடங்கை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்து 24ம் தேதி முதல்31ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து இருக்கிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios