From this month in tamilnadu school stdents will trained english
ஜுலை மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தர லணடனில் இருந்து 100 பேராசிரியர் வருகிறார்கள் என்றும் இதைத் தொடர்ந்து மாயவர்களுக்கு தரமான ஆங்கில பயிறிசி அளிக்கப்படும் என்றும் பள்ளிக் கலவித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அதன் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருச்செங்கோட்டில் நடந்த இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு ரூ.27 ஆயிரத்து 205 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த மாதம் லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வருகிறார்கள் என்றும், அவர்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 6 வாரம் தங்கியிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த ஆங்கிலத்தை கற்றுத்தருவார்கள் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
அங்கன்வாடியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசக்கூடிய வகையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கிளாஸ்’ 3 ஆயிரம் பள்ளிகளில் கொண்டுவர டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்..

9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறைக்கு 10 கணினிகளும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 20 கணினிகளும் வழங்கி இணையதள பயிற்சி அளிக்கப்படும் என்றும், ஒரு சிறந்த ஆசிரியர் 100 பள்ளிகளுக்கு காணொலி காட்சி மூலமாக பயிற்சி அளிப்பார் என்றும் தெரிவித்தார்.
இதே போன்று காமர்ஸ்சில் ஆர்வம் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் 15 இடங்களில் சி.ஏ. பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும், அவர்களுக்கு ஆடிட்டர்கள் பயிற்சி அளிக்க உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் 20 ஆயிரம் மாணவர்கள் இதன்மூலம் தணிக்கை பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனறும் கூறினார்..

இப்படி மாணவர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமைச்சர் செங்கோட்டையன் அடுக்கிக் கொண்டே போனார். அவர் சொன்ன இந்தத் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டால் தமிழக மாணவர்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்ற நிலை கண்டிப்பாக வரும்.
