குவாரி முதல் குட்கா வரை புகாரில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும்.

மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இதனிடையே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் பெற்ற புகாரில் விஜயபாஸ்கர் பெயர் அடிபட்டுள்ளது.

இந்நிலையில், குவாரி முதல் குட்கா வரை புகாரில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடியை வலியுறுத்தியுள்ளார்.