பாஜகவை கடுமையாக விமர்சித்துக் கொண்டே அதிமுகவில் இருப்பது ஒவ்வொரு நாளும் நெருப்பு மீது நடப்பதை போல் இருப்பதாக தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் கூறி புலம்பி வருகிறார் மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை.  

அதிமுகவில் சீனியராக இருந்தும் கட்சி தொடபான சீக்ரெட் மேட்டர்களில் ஒன்று கூட தம்பிதுரைக்கு தெரிவிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளனர் நிர்வாகிகள். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக  விவிஐபி வரவேற்க, தம்பிதுரை எதிர்க்கிறார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காமல் இருக்க எப்படியெல்லால் இறங்கி விமர்சனம் செய்ய வேண்டுமோ அதையும் தாண்டி செய்து வருகிறார் தம்பிதுரை. 

அவையெல்லாம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் இருந்து வரும் உத்தரவுகள் எனக் கூறப்படுகிறது. இதனை அதிமுக முக்கியஸ்தர்கள் தெரிந்து கொண்டதால் அவரை கட்சியில் யாருமே மதிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. அதையும் மீறி அவரை கட்டுப்படுத்த யாராவது முயன்றால் நான் எம்ஜிஆர் காலத்திலேயே அசைக்க முடியாத சக்திகளில் ஒருவனாக இருந்தேன். எனக்கே அட்வைஸா’ என திருப்பியடித்து திக்குமுக்காட வைக்கிறாராம்.

இதனால், அதிமுக நிர்வாகிகள் யாரும் அவரிடம் நெருக்கம் காட்டவே பயப்படுவதாக கூறப்படுகிறது.