இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மதங்களுக்கிடையில் பாகிஸ்தானில் நாளொன்றுக்கு சரியாக 8 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் பெண் குழந்தைகளுக்கு எதிராக அன்றாடம் அரங்கேறும் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த வாரம் பாகிஸ்தானின் கைபர்  பக்துன்க்வா பகுதியில் கடத்தப்பட்ட இரண்டரை வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் உடலில் ஏற்பட்டிருந்த காயங்கள் அவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை காட்டியுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனாலும் குற்றம்  சாட்டப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிட முடியாது என போலீசார் மறுத்து வருகின்றனர், அப்படி வெளியிடும் பட்சத்தில் அது விசாரணையை பாதிக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது  கடத்தப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன அன்று  சிறுமியை அவரது பெற்றோர்கள் அப்பகுதி முழுவதும்  தேடி வந்த நிலையில், மறுநாள் அவரது கிராமத்திற்கு சற்று தொலைவில் சிறுமியின் சடலம் வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அச்சிறுமி கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது நிரூபணமானது. இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். பக் தூங்குவா ஐஜி சனாவுல்லா அப்பாசி, குற்றஞ் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம், ஆனால் விசாரணை பாதிக்கக் கூடும் என்பதால், வேறு தகவல்கள் எதுவும் கூற முடியாது என கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து தெரிவித்துள்ள ஊடகங்கள், இந்த வழக்கை மூடி மறைக்க காவல்துறை முயற்சிப்பதாகவும், இந்த வழக்கின் ஆரம்பத்தில் அதை கடத்தல் வழக்காக பதிவு செய்த போலீசார், பின்னர் அதை கற்பழிப்பு மற்றும் கொலை வழக்காக மாற்றியுள்ளனர் என அந்நாளேடு கூறியுள்ளது. 

இது குறித்து தெரிவித்துள்ள சிறுமியின் பெற்றோர்கள் எங்களது மகள் கடுமையான சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள், நாளைக்கு இதே நிலைமை மற்ற பெண்களுக்கும் நிகழக்கூடும், எனவே குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.. இதேபோல் கடந்த 2018ல் 8 வயதான சிறுமி ஜைனப் பாலியல் வன்முறைக்கு கொலையானபோது பாகிஸ்தானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது, மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். போலிஸார் அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்கினர். அதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர், உலகின் தற்போதைய இறந்த இரண்டு வயது சிறுமியின் பெயரும் ஜைனப் தான்  என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதான பத்திரிக்கையில் ஒன்றாக  தி டான் நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில்பாகிஸ்தானில் ஒவ்வொரு நாளும்  தலா எட்டு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்தால் இறந்துள்ளனர். 

அதாவது ஜனவரி முதல் ஜூன் வரை மொத்தம் 1,489 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அதில் 25 சிறுமிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 13 சிறுவர்கள் 12 சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே தீவிரவாத ஒடுக்குமுறையால் அந்நாடு சீரழிந்து சின்னாபின்னமாகி வரும் நிலையில், உலகில் தற்போது சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பாகிஸ்தானை மட்டுமல்ல அங்கு அரங்கேறும் அக்கிரமம் மனசாட்சி உள்ள ஒவ்வோருவரையும் உலுக்குகிறது..