மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்கள பணியாளர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது, 27 மாவட்டங்களில் நாளொன்றுக்கு 15 நபர்களுக்கு குறைவாகவே கொரோனா பாதிப்பு பதிவாகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது என்று பொதுமக்கள் யாரும் முகக் கவசம் அணியாமல் அலட்சியம் காட்ட வேண்டாம், வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்துதான் வரவேண்டும் என்றார். மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்கள பணியாளர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். முதியோர்களுக்கும் கொரோனா தடுப்பூசி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். 

நாளை 43,051 மையங்களில் போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கட்டாயம் போட வேண்டும். கடந்த வருடங்களில் சொட்டு மருந்து குழந்தைக்கு போட்டு விட்டோம் என்று இந்த வருடம் போடாமல் இருக்க கூடாது. கொரோனா தடுப்பூசி செலுத்தினால் பாதிப்புகள் ஏற்படுகிறது என்ற ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தயக்கம் இருப்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கக் கூடாது. கோவாக்சினை விட கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் ஆர்வம் காட்டினர் என்பதை மறுக்க முடியாது. கோவேக்சின் 3-ம் கட்ட பரிசோதனையில் இருந்ததால் அதை போட்டுக்கொள்ள தயக்கம் இருந்தது. ஆனாலும் அமைச்சர் அதை போட்டுக்கொண்டார்.என தெரிவித்தார். 

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முன்கள பணியாளர்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் 6 லட்சம் பேருக்கு முதலில் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் இதுவரை 1 லட்சம் பேர்தான் தடுப்பூசி பெற்றுள்ளனர். எனவே தடுப்பூசி போடப்படுவதை அதிகரிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 12 லட்சம் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே தடுப்பூசிகள் குறித்து யாரும் கவலைப்படதேவையில்லை. தடுப்பூசிகளை பொருத்தவரை எதிர்பார்த்த இலக்குகளை எட்ட இயலாததால், தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 200 தனியார் மருத்துவமனையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.