free neet exam coaching for government school students
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கிய பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, மாணவர்களிடம் விரோதமாக நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
மேலும் வரும் 24-ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் இலவச பயிற்சி அளிக்க உள்ளன. தலைமை ஆசிரியரிடம் பதிவு செய்தால் நீட் தேர்வுக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் பயிற்சியில் மாணவர்கள் பயிலலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு போராடியது பலனளிக்காததால் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களை தயார் செய்யும் முயற்சியில் தமிழக கல்வித்துறை இறங்கியுள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக எந்த அளவுக்கு தரமாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
