Asianet News TamilAsianet News Tamil

இலவச கொரோனா தடுப்பூசி..திமுக சிங்கிள் விண்டோ, அதிமுக மல்டி விண்டோ சிஸ்டம். புகழ்பாடும் அமைச்சர் உதயக்குமார்..!

இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமான தொழில் முதலீட்டை ஈர்த்து சாதனை படைத்த தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு மதுரை மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு சார்பில் நன்றி அறிவிப்பு விழா நடத்தப்பட்டது.

Free Corona Vaccine..DMK Single Window, ADM Multi Window System. Praise Minister Udayakumar ..!
Author
Madurai, First Published Oct 23, 2020, 11:37 PM IST

இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமான தொழில் முதலீட்டை ஈர்த்து சாதனை படைத்த தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு மதுரை மாவட்ட அனைத்து தொழில் கூட்டமைப்பு சார்பில் நன்றி அறிவிப்பு விழா நடத்தப்பட்டது.

Free Corona Vaccine..DMK Single Window, ADM Multi Window System. Praise Minister Udayakumar ..!

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லை என்றாலும் ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை புள்ளி விபரங்களுடன் கொடுத்தும், ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார், முதல்வரின் செயல்பாட்டை அனைவரும் மனம் திறந்து பாராட்டும் நிலையில் ஸ்டாலின் ஒருவர் மட்டும் குறைக்கூறிவருகிறார். ஸ்டாலின் மனதில் ஒரு சொட்டு ஈரம் கூட கிடையாது. முதல்வர் தன்னுடைய பேச்சால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார். உழைப்பவர்களை அரசு கைவிடாது என்பதற்கு தலைமை செயலாளர் சண்முகமே சான்று. அதிகாரிகளை அரவணைத்து வேலை வாங்குவதற்கு முதல்வருக்கு நிகர் முதல்வரே.!

Free Corona Vaccine..DMK Single Window, ADM Multi Window System. Praise Minister Udayakumar ..!

அதிமுக கட்சியில் நிர்வாக திறன், சகிப்புத்தன்மை உள்ளது. ஆனால் திமுகவிடம் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லை. முக.ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்திற்கு வர துடிப்பதை கண்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள். 5 முறை ஆட்சியில் இருந்த இருந்த திமுகவால் கற்பனை செய்ய முடியாத திட்டங்களை கூட எளிமையாக இருந்து கொண்டு முதல்வர் சாதித்து வருகிறார். தமிழகத்தில் கொரோனோ காலகட்டத்திலும் 40,718 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது, அதிமுக ஆட்சியில் சிங்கிள் விண்டோ சிஸ்டம், திமுக ஆட்சியில் மல்டி விண்டோ சிஸ்டம் இருந்தது, கொரோனோ இலவச தடுப்பு ஊசி அனைவருக்கும் கொடுக்கப்படும் என அறிவித்த ஒரே முதல்வர் இந்திய அளவில் தமிழக முதல்வர் மட்டுமே. அதிமுகவின் ஆலோசனை கூட்டம் உயிரோட்டமான கூட்டம். திமுக கலந்தாய்வு கூட்டம் என்பது ஒரு செட்டப் கூட்டம், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை இன்னும் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். எளிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவதை எதிர்க்கட்சிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை, 2021 ல் தமிழகத்தை முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி வழி நடத்துவார், பல்வேறு சாதனைகளை செய்வார்” என பேசினார்

Follow Us:
Download App:
  • android
  • ios