Free Advice for Stanin form ila ganesan
எப்படி பேச வேண்டும் என்பதை தனது தந்தையான கருணாநிதியிடமிருந்து ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் என பாஜக எம்.பி இல.கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கியதால், பழனிச்சாமியை அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க பணிக்க வேண்டும் என ஆளுநரிடம் எதிர்க்கட்சி என்ற சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், அரசின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட மறுத்துவிட்டார். அதன்பிறகும் எவ்வளவோ கோரிக்கைகள் எழுந்தும் ஆளுநர் அவ்வாறு செய்யவில்லை.
இதனால் ஏற்பட்ட அதிருப்தியால், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வரை பணிக்க ஆளுநருக்கு காலக்கெடு வழங்குவதாக தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய பாஜக மாநிலங்களவை எம்.பி இல.கணேசன், ஸ்டாலின் ஆளுநருக்கு காலக்கெடு வழங்குவதாகக் கூறுகிறார். எப்படி பேச வேண்டும் என்பதை அவரது தந்தையான கருணாநிதியிடமிருந்து ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
