Asianet News TamilAsianet News Tamil

மொட்டையடித்து அஸ்தியை கரைத்த சி.பி.ராதாகிருஷ்ணன்... பெற்றோர்களுக்கு செய்வதை போல் சடங்கு சம்பிரதாயம்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று கரைக்கப்பட்டது. முன்னாள் பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி மறைந்தார். அவரது உடல் மறுநாள் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தியை நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Former Prime Minister Vajpayee Ashti Tribute; CP Radhakrishnan
Author
Erode, First Published Aug 27, 2018, 2:14 PM IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் ஒரே நேரத்தில் நேற்று கரைக்கப்பட்டது. முன்னாள் பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி மறைந்தார். அவரது உடல் மறுநாள் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தியை நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. Former Prime Minister Vajpayee Ashti Tribute; CP Radhakrishnan

இதன் ஒரு பகுதியாக தமிழகத்திற்கு கடந்த 22-ம் தேதி வாஜ்பாய் அஸ்தி கொண்டுவரப்பட்டது. 22, 23-ம் தேதிகளில் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 23-ம் தேதி மாலை 6 மணியளவில் தமிழகம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 10.30 மணியளவில் இந்த அஸ்தி புனித ஆறுகளிலும், கடலிலும் கரைக்கப்பட்டது. Former Prime Minister Vajpayee Ashti Tribute; CP Radhakrishnan

சென்னையில் பெசன்ட்நகர் அஷ்ட லட்சுமி கோவில் அருகில் பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குமரி முக்கடல்கள் சந்திக்கும் இடத்திலும், முன்னாள் தலைவர் இல.கணேசன் தலைமையில் ஸ்ரீரங்கத்திலும், தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ராமேஸ்வரம் கடலிலும், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் பவானியிலும் அஸ்தி கரைக்கப்பட்டது. Former Prime Minister Vajpayee Ashti Tribute; CP Radhakrishnan

பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் மொட்டையடித்துக் கொண்டார். தன்னையும் கட்சியையும் தந்தையாய், தாயாய் வழிநடத்திய தலைவருக்கு தன் கையால் அஸ்தியை கரைத்துக் இறுதிசடங்கை செய்தது புண்ணியமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் காவிரி நதி நீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக 4 மாநிலங்களின் முதல்வர்களையும் கூடிப் பேச வைத்து, 4 மாநில மக்களிடையே சகோதரத்துவத்தை தழைக்கச் செய்தவர் தனது அன்பால் அரசியல் எதிரிகளையும் வென்றெடுத்தவர் வாஜ்பாய். அவரின் லட்சியங்களை நிறைவேற்ற பாஜக பாடுபடும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios