வசமாக சிக்கிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்.. இந்த முறை தப்பிக்கவே முடியாது..? மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சம்மன்
அதில், வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீதம் வரை சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் அவரது இல்லத்தில் இருந்து கணக்கில் காட்டப்படாத 25 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்ட முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஏற்கனவே சம்மன் வழங்கியும் உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி ஆஜராவதிலிருந்து தவிர்த்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் இந்த முறை ஆஜராவாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் கூறி தவிர்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் கூறியபடி ஆட்சிக்கு வந்தவுடன், ஊழல் புகாருக்கு ஆளான அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகவும், அதிக அளவில் சொத்து குவித்ததாகவும் அவருக்கு எதிராக அடிக்கடுக்காக புகார் வந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை 28ஆம் தேதி அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள்: அட்சிக்கு வந்த 5 மாதத்தில் இவ்வளவு ஸ்பீடா..? ஆன்லைனில் வாடகை செலுத்த ஏற்பாடு.. தட்டித் தூக்கிய சேகர் பாபு..
அதில், வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீதம் வரை சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் அவரது இல்லத்தில் இருந்து கணக்கில் காட்டப்படாத 25 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்ட முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களில் அடிப்படையிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது எப்படி என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எம். ஆர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியது. சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் கூறியிருந்தது.
இதையும் படியுங்கள்: அடி தூள்.. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே வழிகாட்டும் முதல்வர் ஸ்டாலின்.. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர்.
ஆனால் உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டிய அவர், தேர்தல் பணி இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது வேறொரு நாள் ஆஜராக அவகாசம் கொடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் அவருக்கு மீண்டும் சம்மன் எப்போது அனுப்ப ப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், வரும் அக்.25 ஆம் தேதி அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.