Asianet News TamilAsianet News Tamil

மதுரைக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.! கலைஞர் நூலகத்திற்கு பல கோடி..! திமுகவை வச்சு செய்யும் செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சியில் புதிய திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
 

Former Minister Sellur Raju has said that the DMK government has not allocated funds for any new projects in Madurai
Author
Madurai, First Published Jul 8, 2022, 12:34 PM IST

சுகாதாரமற்ற குடிநீர்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது, 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது, சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் தொற்று நோய்கள் பரவுகிறது என தெரிவித்தார்.

அதிமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக..! அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது- இபிஎஸ்

மக்கள் வாழ்க்கை மீது நடத்தப்படும் இரக்கமற்ற தாக்குதல்.. பாஜக அரசை வெளுத்துவாங்கிய முத்தரசன்!

Former Minister Sellur Raju has said that the DMK government has not allocated funds for any new projects in Madurai

மதுரைக்கு நிதி ஒதுக்கவில்லை

 மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப பாதாள சாக்கடை பணிகள் நடைபெறவில்லையென்று தெரிவித்தவர், மதுரை மாநகராட்சி வரி வருவாயை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அம்ரூத் குடிநீர் திட்டத்தால் குடிநீர் தட்டுப்பாடு வராது எனவும் கூறினார்,  மதுரையில் கடந்த ஒராண்டில் திமுக எந்தவொரு திட்டமும் செய்யவில்லையென்றும்,  புதிய திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லையெனவும் குற்றம்சாட்டினார். கலைஞர் நூலகம் தவிர எந்தவொரு திட்டத்தையும் மதுரைக்கு கொண்டு வரவில்லையென்றும், அதிமுக காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக தற்போது திறந்து வைத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். மதுரையில் அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்ற வார்டுகளில் தூய்மை பணிகள் நடைபெறவில்லையென கூறிய அவர் இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

இதையும் படியுங்கள்

40 மணி நேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை..! எஸ்.பி.வேலுமனி நண்பர் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்

 

Follow Us:
Download App:
  • android
  • ios