நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் வீடு ஒதுக்கீடு வழக்கிலும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே 3 வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் 4வது வழக்கில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை வேப்பேரியில் உள்ள ஈ.வெ.ரா. பெரியார் சாலை, ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீசாருக்கு மோர் வழங்கும் திட்டத்தை சங்கர் ஜிவால் நேற்று போலீசாருக்கு மோர் வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்;- சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு இன்று முதல் 4 மாதங்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்பட இருக்கிறது. சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான சாலை மாற்ற திட்டங்களை அந்தந்த காவல் மாவட்டத்தில் போக்குவரத்து உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் வகுத்துக்கொள்ளும் முறையை கொண்டு வரப்போகிறோம். 

சென்னையில் உள்ள 367 முக்கிய சந்திப்புகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டி சென்றால் அவர்கள் படிக்கும் பள்ளியை கண்டறிந்து ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிட்காயின் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு புகார்கள் தொடர்ந்து வருகிறது. சட்டவிரோத ஆன்லைன் லோன் ஆப் மூலம் பொதுமக்கள் கடன் பெற வேண்டாம். இதுபோன்ற சைபர் குற்றங்களுக்காக இணை கமிஷனர்கள் தலைமையில் 4 புதிய ‘சைபர் போலீஸ் நிலையங்கள்’ சென்னையில் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய வீடுகளை ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக அவர் மீது திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது. அந்த புகார் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் வீடு ஒதுக்கீடு வழக்கிலும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 3 வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.