former indian cricketer venugopal rao joins jana sena party
இந்திய அணியின் முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர், 2005ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். ஓராண்டுக்கும் குறைவாகவே இந்திய அணியில் ஆடினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

இந்திய அணியில் வேணுகோபால் ராவ் பெரிதாக சோபிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார். 65 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 985 ரன்களை குவித்துள்ளார்.

வேணுகோபால் ராவ், தற்போது அரசியலில் காலடி வைத்துள்ளார். தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். பவன் கல்யாணை நேரில் சந்தித்து தன்னை அவரது இணைத்துக்கொண்டார். கடந்த 2014ம் ஆண்டு நடிகர் பவன் கல்யாண் ஜன சேனா என்ற கட்சியை தொடங்கி அரசியலில் செயல்பட்டு வருகிறார்.
