எத்தனையோ அனல் பறக்கும் தீர்ப்புக்களை வழங்கி நீதியை நிலையாட்டிவர் தான் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.செல்வம்.இவரே நீதிகேட்டு காவல்நிலைய வாசலில் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனையாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்களும் மனிஉரிமைக்காக போராடும் சமூக அமைப்புகளும்...

பூலாங்குறிச்சியில் செந்தில் என்பவரை வழிமறித்து தாக்கியதாக, பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து 20 நாள்களுக்கு மேல் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, காவல் நிலைய வாயில் முன் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் வசிப்பவர் செந்தில். இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ரோட்டில் நடந்து செல்லும் போது,முன் விரோதம் காரணமாக பிரகாஷ், மற்றும்அவரது உறவினர்கள் பவித்ரா, பழனிச்சாமி, பஞ்சு மற்றும் மச்சக்கண்ணு ஆகியோர் குடும்பத்தோடு சேர்ந்து  நடு ரோட்டில் செந்தில் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினியை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் செந்திலின் கை எலும்பு முறிந்து  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து செந்தில் உறவினர்கள்   பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். ஆனால் சம்பவம்  நடந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் ,இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பூலாங்குறிச்சி காவல் துறையினரை கண்டித்து அதே ஊரில் வசித்து வரும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி  செல்வம் தலைமையில், காவல் நிலையம் முன்பு செந்தில் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புகார் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பிய நிலையில், காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக  உறுதி கூறியதையடுத்து ஆர்ப்பாட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதியே தாக்கப்பட்ட உறவினருக்காக, போராட வேண்டிய நிலை தமிழகத்தில் எழுந்துள்ள சம்பவம் பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது.