விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... திமுக தேர்தல் அறிக்கையில் அதிரடி திருத்தம்..!
திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்து, திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்து, திமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 40 மக்களவை தொகுதிகளுக்கும் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
அதில் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை, சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை, கல்விக்கடன் தள்ளுபடி நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கை அனைத்து விவசாயிகளையும் திருப்தி செய்யும் வகையில் இருக்காது என்பதால், தேர்தல் அறிக்கையில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது தேர்தல் அறிக்கையில் சிறு மாற்றத்தை செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் அனைத்துக் பயிர் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.