மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் இந்திரஜித்  மாநிலத்தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதால் தேர்தல் களத்தில் சூறாவளியாக சூழன்று அதிமுக வேலை பார்த்து வருகிறது. தற்போது தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்று கட்சியில் உள்ளவர்களை பாஜகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் குஷ்பு, விஜயசாந்தி உள்ளிட்டோர் இணைந்தனர். 

இந்நிலையில், மறைந்த திமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் இருந்த பரிதி இளம்வழுதியின் மகன் இந்திரஜித் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்திருக்கிறார். இது திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.