தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பி.எஸ்.ஞானதேசிகன். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இதையடுத்து இவர் காங்கிரசிலிருந்து விலகி ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஞானதேசிகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக ஞானதேசிகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.முதற்கட்டமாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது.