கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில், தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,79,357ஆக உள்ளது, இறந்தவர்களின் எண்ணிக்கை 38,135 ஆக உள்ளது. இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்;- நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன். முன்னெச்சரிக்கையாக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கர்நாடக  முதல்வர் எடியூரப்பா, உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.