ஆத்திரத்தில் ஆந்திரா...! அதிகாரம் இருந்தால் தான் மரியாதை..! சந்திரபாபு நாயுடுக்கு இப்படி ஒரு நிலைமையா..? 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை நழுவ விட்டது. இதனால் சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியை இழந்தார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய தீவிர முயற்சியின் காரணமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், மக்களுக்கு போட்டிபோட்டுக்கொண்டு சேவை செய்ய பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.

இதற்கிடையில் ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் நடக்க இருந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்க விஜயவாடா விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது சந்திரபாபு  நாயுடுவை  z+ பாதுகாப்பு கொடுத்தும், சோதனை நடத்தியதோடு மட்டுமல்லாமல் விமான நிலையத்திலிருந்து விமானம் இருக்கும் தளத்திற்கு செல்ல தனியாக இருக்கக்கூடிய வாகனத்தை கூட சந்திரபாபு நாயுடுவுக்கு அளிக்கப்படவில்லை. மக்களோடு மக்களாக அதற்காக உள்ள பேருந்தில் தாங்களும் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவும் சோதனைக்கு உட்பட்டு மக்களுடன் சாதாரண அதே பேருந்தில் ஏறி விமானம் அருகில் இறங்கினார். இந்த விவகாரம் ஆந்திர மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கொண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது எனவும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது எனவும் விமர்சனம் எழுந்துள்ளது. பல்லாண்டு காலமாக சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார். இப்படி ஒரு அவமதிப்பை இதற்கு முன்னதாக அவர் சந்தித்தது கிடையாது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளது. இந்த விஷயம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்களது எதிர்ப்பு குரலை உயர்த்தி உள்ளனர்.