தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியின் அரசியல் 
ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் செல்வாக்கைப் பெற்றவரான தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் அலுவலகத்தில், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை தமிழக அரசியல் களத்தை மட்டுமின்றி இந்தியாவையே அதிரச்செய்தது. எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சோதனை இதுவரை நடந்ததில்லை என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் அப்போது கருத்து தெரிவித்தனர்.  

அதனைத் தொடர்ந்து ராம மோகன ராவ் மகன் விவேக் நடத்திவரும் அலுவலகத்திலும் அதிகாரிகள் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அந்தச் சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.  பின்னர் தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக தனது பணியை தொடங்கிய அவர், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சியின் இணைந்து செயல்பட விருப்பதம் தெரிவித்ததாகவும், ரஜினி பிடிகொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

 

இந்நிலையில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஆரம்பித்துள்ள ஜன சேனா கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்துல் கலாமின் ஊதவியாளராக இருந்த பொன்ராஜ் ஜன சேனா கட்சியில் ஆலோசகராக சேர்க்கப்பட்டார்.