தலைமை கழகத்திற்கு ஆகஸ்ட் 5 ல் வருமாறு தினகரன் அழைப்பு விடுக்கவில்லை என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக துணைப்பொதுச்செயலாளராக இருந்த டிடிவி தினகரன் தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைக்கு சென்று ஜாமினில் திரும்பினார்.

இதனால் எடப்பாடி அமைச்சரவை தினகரனை ஒதுக்கிவிட்டு ஒபிஎஸ்க்கு அழைப்பு விடுத்தது.

ஆனால் ஒபிஎஸ் அணி கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இருந்தாலும், இதுவரை எடப்பாடி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

டிடிவி ஜாமினில் வெளியே வரும் வரை அதிமுகவின் இரு கட்சிகளும் இணையவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிடிவி 60 நாட்கள் பொறுப்பேன், கட்சி இணையவில்லை என்றால் மீண்டும் கட்சி பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

ஆனால் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை டிடிவிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதைதொடர்ந்து 60 நாட்கள் நிறைவுற்ற நிலையில் கட்சி பணியாற்றுவேன் எனவும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தலைமை கழகம் வருவேன் எனவும் டிடிவி தெரிவித்தார்.

இதனிடையே பேசிய அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தைக்காக அவர்கள் குழு கலைக்கப்பட்டிருந்தாலும் எங்களின் வாசல் திறந்தே உள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை கழகத்திற்கு ஆகஸ்ட் 5 ல் வருமாறு தினகரன் அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்தார்.

அணிகள் இணைப்பு குறித்து பேச அமைச்சர்கள் யாரும் அழைப்பு விடுக்கவில்லை எனவும், அவர் தெரிவித்தார்.