Asianet News TamilAsianet News Tamil

பிரேசிலாக மாறப்போகும் பெங்களுர்.. எச்சரிக்கை மணி அடிக்கும் முன்னாள் முதல்வர் குமாரசாமி.!

கர்நாடக முன்னாள்  முதல்வரும், மத  சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி பெங்களூருவில் மேலும் 20  நாட்களுக்கு பொது முடக்கம் ஏற்படுத்த வேண்டும்.இல்லையென்றால் பெங்களுர் பிரேசில் போல் மாறிவிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

Former chief minister Kumaraswamy to be alarmed.
Author
Bangalore, First Published Jun 23, 2020, 11:52 PM IST

 கர்நாடக முன்னாள்  முதல்வரும், மத  சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி. குமாரசாமி பெங்களூருவில் மேலும் 20  நாட்களுக்கு பொது முடக்கம் ஏற்படுத்த வேண்டும்.இல்லையென்றால் பெங்களுர் பிரேசில் போல் மாறிவிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் வெளியிட்டிருக்கும் பதிவில்...

Former chief minister Kumaraswamy to be alarmed.

"மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் இந்தியாவில் கொரோனா வைரஸ்  அதிவேகத்தில் பரவி வருகிறது. மக்கள் உயிருடன் விளையாடுவதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே பெங்களூரு  மக்கள் மீது அக்கறை இருந்தால்,  இங்கு மேலும் 20 நாட்களுக்கு ஊரடங்கு ஏற்படுத்த வேண்டும்.இல்லாவிட்டால் கொரோனா பாதிப்பில் பெங்களூரு பிரேசிலாக மாறி விடும். பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் மதிப்பு மிக்கது.

மற்ற நாடுகளை விட  அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எனவே அதற்கு ஏற்றாற்போல் திட்டங்களை வகுத்து மத்திய அரசு செயல்பட வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் மேலும் 20  நாட்களுக்கு பொதுமுடக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பெங்களூருவில்  தினக்கூலிகள்,  ஆட்டோ ஓட்டுனர்கள், நெசவாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் உதவித் தொகையை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் கர்நாடக அரசு  செலுத்த வேண்டும்.இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.  உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா 4-ம் இடத்தில் உள்ளது.  அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் இருக்கின்றன. 

Former chief minister Kumaraswamy to be alarmed.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.40 லட்சமாக உயர்ந்துள்ளது. 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 142 பேர் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்" என்று பதிவு செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios