சத்தீஸ்கர் முன்னாள்  முதல்வர் அஜித் ஜோகி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக 2000-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு நவம்பர் வரை பதவி வகித்தவர் அஜித் ஜோகி (74). ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியை தொடங்கிய இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த போது திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே ஸ்ரீநாராயணா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச பிரச்சினை உள்ளதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவ வட்டாரங்கள் கூறுகையில் மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர் தீவிர மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.