ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் மற்றும் பாஜக மூத்த தலைவரான மானிக்யாலா ராவ்.இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சையில் இருந்த இவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் இது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது 70 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.இந்த நிலையில் விஜயவாடாவின் முன்னாள் அறநிலைத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவரான மானிக்யாலா ராவ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தவர். சிகிச்சை  பலன் அளிக்காமல் காலமானார்.இவரது மரணம் பாஜகவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.