பாகிஸ்தான் கடந்த காலம் நடத்திய போர்களில் இந்தியாவின் காலடியில் விழுந்து மண்டியிட்டதை நினைத்துப் பார்க்க வேண்டும் என பாஜக தலைவர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

 

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் செல்ல தயங்காது என அந்நாட்டு  பிரதமர் இம்ரான் கான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

‘’இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முரண்பாடுகள் போரை நோக்கி சென்றால் இருநாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். உலக நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறது’’ எனத் தெரிவித்து இருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ஷாநவாஸ் ஹூசேன், ’’பாகிஸ்தான் கடந்த காலம் நடத்திய போர்களில் இந்தியாவின் காலடியில் விழுந்து மண்டியிட்டதை நினைத்துப் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி பாகிஸ்தானின் எல்லாவிதமான நோய்களுக்கும் சிகிச்சையளிப்பார். அமெரிக்காவுடன் இந்தியா சம அளவில் இருக்கிறது. பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பிச்சை எடுக்கும் நாடாக இருக்கிறது’’ எனச் சாடினார். 

இதையும் படிங்க:- ’ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீங்க...’ இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான் பிரதமர்..!