விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான லட்சுமணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சி காட்டாற்று வெள்ளம் போல் நடந்து கொண்டு இருக்கிறது. அதில் தத்தளிக்க விரும்பவில்லை. தமிழக அரசு வலுவான தலைமையின் கீழ் நடைபெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக திமுகவில்  என்னை இணைத்து கொண்டேன். விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினரை ஒருங்கிணைக்க அமைச்சர் சி.வி.சண்முகம் முறையாக செயல்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், என்னை அரவணைத்து கழக பணி ஆற்றிட கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவில் இணைத்ததற்கு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்களுக்கும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள்அமைச்சர் பொன்முடி அவர்களுக்கும், கழகப் பொருளாளர் அவர்களுக்கும் தலைமை கழக நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த கொள்கிறோம் என்றார். 

தற்போது நானும் முக்கிய நிர்வாகிகள் 15 பேர் கலந்து கொண்டு இணைந்துள்ளோம். கொரோனா நோய்ப் பரவல் குறைந்த பின் 10 ஆயிரம் பேரை திரட்டிக் இணைப்பு விழாவை விமர்சியாக நடத்தப்படும் என்றார்.  2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியாரை முதல்வர் ஆக்குவதாக கூறி பின்னர்  மாண்புமிகு தளபதி அவர்களை முதல்வராக ஆக்குவோம் என்று கூறியுள்ளார். இதனால் அறிவாலயத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.