சிவகங்கை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.சந்திரன் நுரையீரல் தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றுக்கு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சிவகங்கை மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சந்திரன் மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முன்னாள் எம்எல்ஏ சந்திரன் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மறைவுக்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.