இதுகுறித்து பேசியுள்ள அவர், ’ராஜீவ்காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம். நாங்கள் தான் இந்த மண்ணிலே புதைத்தோம் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் அராஜாகமாக பேசியுள்ளார்.  இப்படி பேசுவதற்கு தேர்தல் ஆணையம் எப்படி அனுமதி கொடுத்தது? 

ஒரு சின்னதாக கூட்டம் கூடியதற்கே போலீஸார் வந்து என்ன செய்யப்போகிறீர்கள்..? ஏது செய்யப்போகிறீர்கள் என வந்து விசாரிக்கிறார்கள். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பேனரை பின்னால் வைத்துக் கொண்டு  சீமான் பேச எப்படி அனுமதித்தார்கள். காவல்துறை சீமானை கட்டாயம் கைது செய்து இருக்க வேண்டும்.  தாமாகவே வந்து அவர்களே வந்து வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் புகார் கொடுத்த பிறகு பேருக்கு இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

 

இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  சீமான் அவர்களை எச்சரிக்கிறேன். கோகலே போன்ற காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கிடையாது நாங்களெல்லாம்.  சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தொண்டர்களும் காங்கிரஸில் இருக்கிறார்கள்.  லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் அழகிரி இந்த விஷயம் குறித்து பேசும்போது, சீமான் அவர் கருத்தை கூறினார். நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்தோம் என்று கூறினார். அந்த மாதிரி கருத்துக்களை இங்கே வந்து பேசக்கூடாது. கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.

சீமான் பகிரங்கமாக வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.  சும்மா எதையாவது பேச வேண்டியது? இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டியது. தடா சந்திரசேகரை வைத்து போலீஸிடம் பேசி வெளியே வந்து பூச்சாண்டி காட்டுவது..? இதுபோன்று எல்லாம் காங்கிரஸில் இருப்பவர்கள் கிடையாது எதையும் எதிர்கொள்வோம். 

2014ல் தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் தமிழக தலைமயகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வீரலட்சுமி, சீமான் எல்லாம் வந்து கோஷம் போட்டார்கள். காங்கிரஸ் தொண்டர்களாகிய நாங்கள் அடித்து துரத்தினோம். நாங்க வெறும் நூறு பேர் தான் இருந்தோம். நீங்கள் ஆயிரம் பேர் இருந்தீர்கள் அடித்து துரத்தினோம் அது மறந்து போய் விட்டதா..?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.