வெளிநாட்டினரையும் திரும்பி பார்க்க வைத்த இன்றைய தமிழக கூட்டணி அறிவிப்பு..! 

அதிமுக- பாமக கூட்டணி அறிவித்த போது, அங்கிருந்த வெளிநாட்டினரும் ஆவலாக போட்டோ எடுத்த காட்சி வெகுவாக ஈர்த்து உள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் வெளியாக உள்ளது. இந்த தேர்தலை சந்திக்கவும், கூட்டணி அமைப்பதிலும் அரசியல் கட்சிகள் மிக தீவிரமாக இறங்கி உள்ளன

பாமக திமுக கூட்டணியிலா அல்லது அதிமுக கூட்டணியிலா என குழப்பம் இருந்த நிலையில் தற்போது சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டணி கூட்டணியை உறுதி செய்தனர். 

மேலும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக-அதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி கூட்டாக கூட்டணி குறித்து அறிவித்தனர். இந்த அறிவிப்பு இன்று காலை கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றதால், அங்கு தங்கி இருந்த வெளிநாட்டினர் ஆர்வமாக போட்டோ எடுத்தனர். 

ஆக மொத்தத்தில் வெளிநாட்டினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது தமிழக அதிமுக கூட்டணி அறிவிப்பு..