தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக் கொள்வதற்காக சென்னையிலிருந்து ஒரே விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் இருவரும் மதுரைக்கு சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திலுள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் முக.ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணித்தனர். முதல் வரிசையில் இடதுபுறம் ஜன்னல் பக்க இருக்கையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமியும்,  வலது புறம் ஜன்னல் பக்க இருக்கையில் எதிர்கட்சி தலைவரும் மு.க.ஸ்டாலினும் அமர்ந்தனர்.

பயணத்தின் தொடக்கத்தில் முதல்வர் பழனிசாமி மு.க.ஸ்டாலினை பார்த்ததும் வணக்கம் தெரிவிக்க மு.க.ஸ்டாலினும் வணக்கம் செய்தார். இந்த விமானத்தில் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரும் சென்றனர். முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவரும் முதல்முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்தனர்.