பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்.. எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது.. முதல்வர் ஸ்டாலின்.!

கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு உதவியாய் நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Football Player Priya death is an unbearable grief.. CM Stalin.!

கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு உதவியாய் நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியாவுக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலி காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது பிரியாவின் காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவி பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

இதையும் படிங்க;- கால்பந்து வீராங்கனை பிரியா இல்லத்திற்கு சென்ற முதல்வர்.. ரூ.10 லட்சம் நிதி, அரசு வேலை, வீடு வழங்க ஆணை..!

Football Player Priya death is an unbearable grief.. CM Stalin.!

தவறான சிகிச்சையால் அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கால்கள் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 15-ம் தேதி பிரியா உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து சுகாதாரத்துறை தரப்பிலும், காவல்துறையினர் தரப்பிலும் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது எப்படி? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பரபரப்பு தகவல்..!

Football Player Priya death is an unbearable grief.. CM Stalin.!

இந்நிலையில், இன்று காலை பிரியாவின் வீட்டிற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது, பிரியாவின் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பார்வையிட்டார். இதனையடுத்து, அரசு சொன்னது போல ரூ.10 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அரசு சார்பாக வீடு ஒதுக்கியதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் - நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு.

 

 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் பிரியாவின் உயிர்க்கு ஈடாகாது என கவலையுடன் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios