தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்துவந்தார் விஜயசாந்தி. இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஹைதரபாத் மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அதேவேளையில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தெலங்கானாவில் அழுத்தமாக கால் பதித்தது. இதனையடுத்து  காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக விஜயசாந்தி அறிவித்தார். 
இந்நிலையில் விஜயசாந்தி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நாளை சந்தித்த விஜயசாந்தி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த விஜயசாந்தி, பின்னர் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் சேர்ந்து மேடக் தொகுதி எம்.பி.யாகவும் இருந்தார். பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி இணைந்தார்.
தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளார் விஜயசாந்தி. அண்மையில்தான் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது விஜயசாந்தியும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளார்.