Asianet News TamilAsianet News Tamil

என்னது 50 ஆயிரத்துக்கும் மேல் பணமா..? விடாதீங்க… பறக்கும் படை அமைக்க தேர்தல் ஆணையம் ஆர்டர்

உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள மாவட்டங்களில் பறக்கும் படையை அமைக்குமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

Flying squad local election
Author
Tamil Nadu, First Published Sep 21, 2021, 7:44 PM IST

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள மாவட்டங்களில் பறக்கும் படையை அமைக்குமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

Flying squad local election

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணிகளில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் படு பிசியாக இருக்கின்றன.

தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பக்காவாக செய்து வருகிறது. இந் நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள மாவட்டங்களில் பறக்கும் படையை அமைக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

Flying squad local election

இது குறித்து உத்தரவு ஒன்றை தேர்தல் ஆணையம் பிறப்பித்து உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் 9 மாவட்டங்களிலும் ஒரு செயற்குற்றவியல் நீதிபதி, 2 காவலர்கள் கொண்ட பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்.

3 ஊராட்சி ஒன்றியங்களை கொண்ட தொகுப்புக்கு ஒரு பறக்கும் படை கட்டாயம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் யாரேனும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios