Rameswaram fishermen who went fishing in the sea marine police have confirmed that the gunman

கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, துப்பாக்கியால் சுட்டது இலங்கை படையினர்தான் என்பதை மரைன் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் மீன் பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினர் சுட்டனர். இதில், துப்பாக்கி சூட்டில் பலியான பிரிட்ஜோவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டை, மண்டபம் மரைன் போலீசார் ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வில், மீனவர் பிரிட்ஜோ உடலில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டு 1.5 இன்ச் நீளம் கொண்டுள்ளது. இந்த குண்டு ஏ.கே. 47 ரக துப்பாக்கியில் பயன்படுத்த கூடியது. இதன்மூலம் இலங்கை கடற்படையினர், பிரிட்ஜோ மீது துப்பாக்கி சூடு நடத்தினர் என்பது உறுதியானது.

இதை தொடர்ந்து, இலங்கை கடற்படையினர் மீது கொலை, கொலை முயற்சி, துப்பாக்கியால் சுட்டது என 3 பிரிவுகளில், மண்டபம் மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால், இலங்கை கடற்படை வடக்கு பிராந்திய செய்தி தொடர்பாளர் கேப்டன் சமிந்த வலகுலகே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என பகிரங்கமாக மறுப்பு தெரிவித்துள்ளார்