Fisheries Minister Babubhai Bokhiriya wins Porbandar first time in history congress defeated in gandhi land

குஜராத்தில் மகாத்மா காந்தி பிறந்த மண்ணான போர்பந்தர் எனும் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்று வந்திருக்கிறது. ஆனால், முதன்முறையாக பாஜக வேட்பாளர் பாபு போகிரியா இங்கே வெற்றி பெற்று இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

போர் பந்தர் தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா தோல்வியைத் தழுவினார். பாஜகவின் பாபு போகிரியா வெற்றி பெற்றார். இவர், மீன் வளத்துறையின் அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் என்பது குறிப்பிடத் தக்கது.

2,23,590 வாக்காளர்கள் உள்ள தொகுதி இது. கடந்த 2011ம் வருடம் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போர்பந்தர் நகரில் மொத்தம் 3,84,660 பேர் மக்கள்தொகை கொண்ட நகர். இந்த நகருக்கு அக்டோபர் 2ம் தேதி ராகுல் காந்தி வந்து பார்வையிட்டார். அன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள் என்பதால், அதை முன்னிட்டு வந்த ராகுல், இங்கே மீனவ சமுதாய மக்களிடம் பேசி, பிரசாரமும் செய்தார். இங்கே 217 வாக்குச் சாவடிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வாக்குப் பதிவு நடந்தது.

போக்ரியா தன்னை அடுத்து வந்த அர்ஜுன் மோத்வாடியாவை விட 1855 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி அடைந்தார். 

மகாத்மா காந்தி பிறந்த மண்ணான இங்கு, மீனவ சமுதாய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களின் வாக்குகள் பெரும் பங்கு ஆற்றும் என்பதால், இதே தொகுதியில் மீன்வளத் துறை அமைச்சரே போட்டியிட்டார் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், முதல் முறையாக காந்தி பிறந்த மண்ணில் பாஜக., வென்று சாதனை படைத்திருப்பது, காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த பேரிடி என்றுதான் கூறுகிறார்கள்.