டூவிட்டரில் தன்னிடம் கேள்விகேட்ட நபருக்கு பதில் அளிக்காமல் அந்த நபரை எச்.ராஜ உடனே பிளாக் செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து எச். ராஜவை பலர் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த லதா என்ற பெண் கடந்த 16ஆம் தேதி இரவு தன் மகன் பிறந்த நாளையொட்டி கோவிலுக்கு வழிபடச் சென்றார்.  அப்போது நடராஜர் கோவிலில் தீட்சிதராக  உள்ள தர்ஷன் என்ற நபர் மந்திரம் ஓதாமல்  பூஜை செய்துள்ளார்.  அவரை மந்திரத்தைச் சொல்லி பூஜைசெய்ய கைட்டுள்ளார்  அந்தப் பெண், அதற்கு  அந்த நபர் மந்திரம் ஓதுவதும் ஓதாதாதும் என்னுடைய விருப்பம். அதைகேட்க நீ யார்... எனவும் அத்துடன்  ஆபாசமாகவும்  திட்டி கன்னத்தில் அறைந்து அராஜகத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து அந்த பெண்,  போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம்  உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ்  தீட்சிதர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .  இந்நிலையில் அந்த நபர் தலைமறைவாகி உள்ளார்,  போலீசார் அவரை தேடி வருகின்றனர்.  இதற்கிடையே கோயில் நிர்வாகத்தின் சார்பில் அந்த தீட்சிதருக்கு 5 ஆயிரம் அபராதம்,  இரண்டு மாதம் கோவில் பூஜைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவரான எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மத உணர்வுகளைப் புண்படுத்தினால் அவர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்களோ,  அதுபோல இந்துக்களின் மத  உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால்,  இந்துக்கள் எதிர்வினையாற்றும் வரை திருமாவளவன் போன்ற இந்து விரோதிகள் ஹிந்துக்களை சீண்டி  கொண்டுதான் இருப்பார்கள் வீதிக்கு வரும் நேரமிது  என கூறியிருந்தார். 

 இதற்கு பலர் ரீ டுவிட் செய்துள்ளார்.  அதில் சிவசங்கரன் சரவணன் என்பவர் எச். ராஜாவிடம் ஐயா நம் இந்து சொந்தம் ஒருவரை,  சிதம்பரம் பார்ப்பான்  கன்னத்தில்  அடிச்சிட்டான் அவனை கண்டித்து நீங்கள் போராட்டம் அறிவிக்க வேண்டும் என்று அவர் கூற,  அதற்கு எந்த பதிலும்  அளிக்காமல் எச்.ராஜா உடனே அவரை பிளாக் செய்துள்ளார். அதற்கு அந்த நபர் என்ன இதுக்கு போய் அய்யா என்ன பிளாக் பண்ணிட்டாரு என பதில் டுவிட் செய்து, எச் ராஜாவை பங்கம் செய்துள்ளார்.  தன்னிடம் கேள்வி கேட்ட ஒரு நபருக்கு பதிலளிக்க முடியாமல் எச். ராஜா அந்நபரை பிளாக் செய்துள்ள சம்பவம் சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.