பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று 71 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா பாதிப்புக்கு நாட்டில் நடக்கும் முதல் இது என்பதால், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
அதன்படி ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்ச வாக்காளர்களின் எண்ணிக்கை 1000ஆக குறைக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் கையுறை அணிந்துகொண்டும் சானிடைஸர் முகக் கவசம் பயன்படுத்தி வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் சில இடங்களில் வெடிக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால், போலீஸ், துணை ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


முதல் கட்ட இன்று நடைபெறும் நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது.  இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் -பாஜக கூட்டணி, எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி இடையே பலத்த போட்டி நிலவுகிறது.