Asianet News TamilAsianet News Tamil

சிறையில் இருந்து வந்ததும் முதல் வேலை..! டிடிவியின் பியூசை பிடுங்கிய சசிகலா..! பெங்களூரில் நடந்தது என்ன?

சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு முதல் வேலையாக இதுநாள் வரை டிடிவி தினகரனிடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் சசிகலா பறித்துள்ளார்.

First job after coming out of jail ..! Sasikala snatches TTV Dhinakaran fuse ..!
Author
Bangalore, First Published Feb 1, 2021, 10:44 AM IST

சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகு முதல் வேலையாக இதுநாள் வரை டிடிவி தினகரனிடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் சசிகலா பறித்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் சசிகலா சிறை செல்லும் முன்பு அதிமுகவில் மறுபடியும டிடிவி தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேசை சேர்த்துக் கொண்டார். அத்தோடு தினகரனை அதிமுக துணைப் பொதுச் செயலாளராகவும் சசிகலா நியமித்துச் சென்றார். அதிமுக மற்றும் ஆட்சியை கவனமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சசிகலாவால் தினகரனுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் நான்கு வருடங்களுக்கு பிறகு சசிகலா திரும்பி வந்த போது தினகரன் வசம் அதிமுக கட்சியும் இல்லை. ஆட்சியும் இல்லை. ஆனால் சிறையில் இருந்த வரை கட்சி விவகாரங்கள், பண விஷயங்களை தினகரனையே பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருந்தார் சசி.

First job after coming out of jail ..! Sasikala snatches TTV Dhinakaran fuse ..!

இந்த நிலையில் சசிகலா விடுதலை ஆனது முதல் டிடிவி தினகரன் மிகவும் அடக்கியே வாசித்து வருகிறார். செய்தியாளர் சந்திப்பின் போது ஓபிஎஸ் – இபிஎஸ்சுக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. வழக்கமாக செய்தியளார்களின் சந்திப்பின் போது உற்சாகம் ததும்ப ததும்ப பேசும் தினகரன் பெங்களூரில் 2 முறை செய்தியாளர்களை சந்தித்த போதும் முகம் களை இழந்திருந்தது. இதற்கு காரணம் சசிகலா மருத்துவமனையில் இருந்த போதும் சரி, ரிலீஸ் ஆகி ரிசார்ட்டுக்கு செல்லும் போதும் சரி அந்த சீனில் அதிகம தினகரனை பார்க்க முடியவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆளுநரை சசிகலா சந்திக்கச் சென்றது முதல் சிறைக்கு செல்லும் வரை டிடிவி தினகரனை புல் மேக்கப்பில் நாம் பார்த்திருக்கலாம்.

First job after coming out of jail ..! Sasikala snatches TTV Dhinakaran fuse ..!

இப்படி சீனில் இருந்து தினகரன் தானாக ஒதுங்கவில்லை என்கிறார்கள். சசிகலாவே ஒதுக்கிவிட்டார் என்கிறார்கள். கட்சி, ஆட்சி பறிபோக முதல் காரணம் டிடிவி தான் என்று சசிகலா முடிவெடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். மேலும் கட்சி, ஆட்சி விவகாரத்தில் தினகரனை நம்பியது பெரிய தவறு என்று சசிகலா உணர்ந்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே அதிமுகவை மீட்கும் தனது புதிய முயற்சியில் தினகரனை ஓரம்கட்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தினகரன் அமமுக என்று கட்சி நடத்தினாலும் அந்த கட்சியின் கொடியை சசிகலா தனது காரில் பயன்படுத்தவில்லை. மேலும் அமமுக தொண்டர்களையோ, நிர்வாகிகளையோ சசிகலா சந்திக்க தயாராக இல்லை.

First job after coming out of jail ..! Sasikala snatches TTV Dhinakaran fuse ..!

அதிமுகவை மீட்கும் தனது முயற்சிக்கு தினகரன் இடைஞ்சலாக இருப்பார் என்றே சசிகலா கருதுகிறார். எனவே தான் சிறையில் இருந்து வெளியே வந்த முதல்   வேலையாக தினகரனை சசிகலா ஓரம்கட்டியுள்ளார் சொல்கிறார்கள். மேலும் கடந்த மூன்று வருடங்களாக அமமுக என்கிற பெயரில் கட்சியை நடத்தாமல் ஜாதிச் சங்கத்தை தான் தினகரன் நடத்தி வந்துள்ளதையும் சிலர் சசிகலாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். இவற்றை எல்லாம் மனதில் வைத்து தான் தினகரனை சசிகலா ஒதுக்கியதாக கூறுகிறார்கள். இதனிடையே சசிகலா தற்போது தனது உறவினர் டாக்டர் வெங்கடேசை தன்னுடன் தங்க வைத்துள்ளதாக கூறுகிறார்கள். அவர் மூலமாகவே தனதுஅரசியல் செயல்பாடுகளை தொடங்கியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

First job after coming out of jail ..! Sasikala snatches TTV Dhinakaran fuse ..!

இதனிடையே சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் சில உறவினர்கள் விரைவில் பெங்களூர செல்ல உள்ளனர். இதே போல் அதிமுகவில் இருந்து சசிகலா பக்கம் வந்த மூத்த நிர்வாகிகளில் தற்போதும் அவர் பக்கம் உள்ள பழனியப்பனும் விரைவில் சசிகலாவை சந்திப்பார் என்கிறார்கள். இதன் பிறகு சசிகலாவின் அரசியல் நகர்வுகளை தெரிவிக்கும் பொறுப்பு டாக்டர் வெங்கடேஷ் அல்லது பழனியப்பனிடம் ஒப்படைக்கப்படும் என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios