நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி தடையை மீறி மெரினாவில் போராட்டம் நடத்திய பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட 311 பேர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கூடுதல், அத்து மீறி நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  மிரதமர் மோடியை, மத்திய அமைச்சர் அமித் ஷாவை பற்றி சர்ச்சையாக பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி அவர்கள் மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈருபட்டனர்.

 

ஆனால் மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அதனையும் மீறி பாஜகவினர் காந்தி சிலை அருகே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.