நடந்து முடிந்த தேர்தல் ரிசால்ட்டால் பாமக, தேமுதிக கட்சியின் அங்கீகாரத்தை இழந்துள்ள நிலையில், அதிமுகவும் தனது வாக்குவங்கியை அனாமத்தாக பறிகொடுத்துள்ளது. அமைச்சர்களின் தொகுதியிலேயே மரண ஆடி வாங்கியதை அதிமுக தனது வாழ் நாளில்    நினைத்துக்கூட பார்த்திருக்காது. 

இப்படி இருக்கையில் தங்களுக்கென இருப்பதோ மூன்று ஜாஜ்யசபா சீட் தான், அதில் ஒன்றை பிஜேபி கேட்டு வருகிறது. மத்தியில் ஆளும் கட்சி என்பதால் மறுத்தால் என்னவேனாலும் நடக்கும். அடுத்ததாக கூட்டணி ஒப்பந்தம் போடும்போது பாமகவுக்கு ஒன்னு கொடுப்பதாக சொன்னதால் கிட்டத்தட்ட அவர்களுக்கு கொடுக்கும் முடிவில் இருப்பதாக சொல்கிறார்கள், ஆக மிச்சம் கையில் இருப்பது ஒண்ணே ஒண்ணுதான்.

மிச்சம் இருக்கும் ஒரே சீட்டுக்கு பல போட்டி நிலவி வருகிறதாம்,  இதில் அதிமுக சீனியர்களான தம்பிதுரை, மைத்ரேயன், கேபி முனுசாமி, கோகுல இந்திரா போன்ற முக்கிய புள்ளிகள் கேட்டு நச்சரிக்கிறதாம்.  கடந்த சில தினங்களாக இந்த நச்சரிப்பு  உச்ச கட்ட உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.துணை சபாநாயகராக இருந்ததால் தனக்கு முன்னுரிமை அளிக்கணும் என கட்சியின் சீனியரான தம்பிதுரையும் தற்போது எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. எடப்பாடியும் தனக்கு நெருக்கமான டெல்லி அனுபவம் வாய்ந்த ஒருவரை அனுப்பலாம் என்று முடிவு செய்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆகையால், அது தம்பிதுரையா, இல்ல பிஜேபிக்கு நெருக்கமாக இருக்கும் மைத்ரேயனா என அதிமுக  வட்டாரத்தில் குழப்பம் நீடித்துள்ளதாம். எடப்பாடி தனக்கு சாஸ்தகமாக முடிவெடுக்க இருப்பதால் இதனால் ஓபிஎஸ் அணியில் இருக்கும் சீனியர்கள் தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது . ஆனால் , இருக்கும் ஒரு சீட்டை யாருக்கு கொடுப்பது என பயங்கர டெங்ஷனில் இருக்கிறாராம் எடப்பாடி.